» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியா- பாகிஸ்தான் அணு ஆயுத போர் மூண்டால் 12½ கோடி மக்கள் பலியாவார்கள்- பாதுகாப்பு அறிக்கை

வியாழன் 20, பிப்ரவரி 2020 5:26:00 PM (IST)

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அணுஆயுத போர் மூண்டால் 5 கோடி முதல்  12½ கோடி வரை மக்கள் பலியாவார்கள் என முனிச் பாதுகாப்பு மாநாட்டு அறிக்கையில் பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.

காஷ்மீரில் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் நடந்தால் 2025ல் இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் இருதரப்பிலும் 12.5 கோடி மக்கள் பலியாக வாய்ப்புள்ளது என முனிச் பாதுகாப்பு மாநாட்டு அறிக்கையில் பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒவ்வொரு ஆண்டும், சக்திவாய்ந்த உலகளாவிய தலைவர்கள் ஜெர்மனியின் முனிச் நகரில் அமைதி மற்றும் ராஜதந்திரம் பற்றி விவாதிக்க ஒரு மாநாடு நடத்தப்படும். இம்மாநாடு அதிகாரமிக்க ஒன்றாக கருதப்படவில்லை என்றாலும், மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடக்கும் சர்வதேச ரகசியங்கள் குறித்தும் ராஜதந்திர வியூகங்கள் குறித்தும் விவாதிக்கப்படும்.

முனிச் நகரில் முடிந்த மாநாட்டை தொடர்ந்து, ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: காஷ்மீரில் ஒரு தீவிரவாத தாக்குதல் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றங்களை அதிகரிக்க வழிவகுக்கும், மேலும் இரு அணுசக்தி  நாடுகளுக்கிடையில் ஒரு முழு அளவிலான இராணுவ மோதலுக்கு கூட வழிவகுக்கும். இந்தியாவும், பாகிஸ்தானும் முறையே 100 மற்றும் 150  அணு ஆயுதங்களை வைத்துள்ளன. இரு நாடுகளும் 15 முதல் 100 கிலோ டன் அணு ஆயுதங்களை பயன்படுத்தும்  இதன் விளைவாக 1.6-3.6 கோடி டன் கருப்பு கார்பன் புகை வெளியேறும். 

இதன் விளைவாக 5 கோடி முதல் 12.5 கோடி வரை மக்கள்  உடனடியாக கொல்லப்படக்கூடும், பூமியின்  மேற்பரப்பு சூரிய ஒளியில் 20-35 சதவிகிதம் சரிவு ஏற்படும். நிலத்தில் உற்பத்தித்திறன் 15-30 சதவிகிதம் மற்றும் கடல்களில்  நீர்மட்டம் 5-15 சதவிகிதம் சரிவு ஏற்படும் என கூறி உள்ளது.கடந்த ஆண்டு அக்டோபரில், கொலராடோ போல்டர் பல்கலைக்கழகம் மற்றும் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணு ஆயுத போர்  ஒரு வாரத்திற்கும் குறைவாக நீடிக்கும் மற்றும் 5 கோடி முதல் 12.5 கோடி  மக்கள் வரை கொல்லக்கூடும்.  இறப்பு எண்ணிக்கை இரண்டாம் உலகப் போரை விட அதிகமாக இருக்கும் என்று அறிக்கை கூறியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory