» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உலகில் அதிகம் வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது: டிரம்ப் விமர்சனம்

வெள்ளி 21, பிப்ரவரி 2020 3:25:04 PM (IST)

உலகில் அதிகம் வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார்.

அமெரிக்க அதிபர்  டொனால்டு டிரம்ப் , மனைவி மெலனியா டிரம்ப்  ஆகியோர் வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கின்றனர். டொனால்டு டிரம்பை வரவேற்க  அகமதாபத்தில் சிறப்பான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.  டிரம்ப் செல்லும் 22 கி.மீ. சாலை வழி பயணத்தில் அவரை வரவேற்க 2 லட்சத்துக்கும் அதிகமானோர்  வருவார்கள் என்று சொல்லப்படுகிறது. 

டிரம்பை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகளுக்கு இந்தியா தயாராகி வரும் நிலையில், இந்தியா விமர்சிக்கும் வகையில் டிரம்ப் பேசியிருக்கிறார். டிரம்ப் கூறியிருப்பதாவது ;-  அடுத்த வாரம் நான் இந்தியாவுக்கு செல்ல இருக்கிறேன்.  வர்த்தகம் தொடர்பாக பேச இருக்கிறேன். பல ஆண்டுகளாக  நமக்கு (அமெரிக்கா) இந்தியா நெருக்கடி கொடுத்து வருகிறது.  பிரதமர் மோடியை எனக்கு மிகவும் பிடிக்கும். எனினும், வர்த்தகம் தொடர்பாக சிறிது  பேச வேண்டியுள்ளது.  உலகில் அதிகம் வரிவிதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது” என்று தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory