» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜூன் மாதத்திற்குள் நடவடிக்கை: பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை!!

வெள்ளி 21, பிப்ரவரி 2020 4:10:51 PM (IST)

யங்கரவாதத்துக்கு உதவி கிடைப்பதைத் தடுக்க ஜூன் மாதத்திற்குள் நம்பகமான நடவடிக்கை எடுக்கத் தவறினால், பாகிஸ்தானை எச்சரிப்போம் என்று சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு கூறி உள்ளது.

பாகிஸ்தான் நான்கு மாதம் வரை தொடர்ந்து சர்வதேசநிதி நடவடிக்கை பணிக்குழுவின் சாம்பல் பட்டியலில் இருக்கும். இந்த நான்கு மாத காலத்தில் உருப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் அதன் பிறகு கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் நிரந்தரமாக சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. பாரீசில் நடைபெற்று வரும் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு (எப்ஏடிஎப்) கூட்டத்தில் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள் மீது எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை  தாக்கல் செய்தது

சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு அளித்திருந்த 27 பரிந்துரைகளில் 14 அம்சங்கள் மட்டும்  நிறைவேற்றப்பட்டுள்ளது, 11 அம்சங்கள் ஓரளவு நடைமுறைப்படுத்தியுள்ளது. தீவிரவாதக் குழுக்களுக்கு நிதி உதவி கிடைப்பதைத் தடுக்க பாகிஸ்தான் சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடந்து வருகிறது.

இதில் 205 நாடுகள் மற்றும் அதிகார வரம்புகளைச் சேர்ந்த 800 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளுடன் சர்வதேச நாணய நிதியம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.பாகிஸ்தான் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு சாம்பல் பட்டியலில் ஜூன் மாதம் வரை  நீடிக்கும் என்று கூறி உள்ளது. அதன்பிறகு ஜூன் மாதத்திற்குப் பிறகு கருப்பு பட்டியலுக்கு நழுவக்கூடும் பயங்கரவாத நிதியுதவிக்கு எதிராக வழக்குத் தொடுப்பதிலும் அபராதம் விதிப்பதிலும் பாகிஸ்தான் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணவில்லை. இது சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவுக்கு கவலை அளிக்கிறது.

ஜூன் மாதத்திற்குள் பாகிஸ்தான் நம்பகமான நடவடிக்கை எடுக்கத் தவறினால், அதனை அழைத்து  எச்சரிப்போம் என்று சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு கூறி உள்ளது. பாகிஸ்தானுடனான வணிக உறவுகள் மற்றும் பரிவர்த்தனைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்த பாகிஸ்தானின் நிதி நிறுவனங்களுக்கு நிதி நடவடிக்கை பணிக்குழு ஆலோசனை கூறி உள்ளது. குறிப்பாக, எட்டு  பிரிவுகளில் நடவடிக்கை எடுக்க பாகிஸ்னை சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு  கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசை பிப்ரவரி மாதத்தில் சாம்பல் பட்டியலில் இருந்து  வெளியேறறி விடலாம் என்று அதன் மக்களுக்கு உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory