» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உலக அளவில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 46 லட்சத்தைக் கடந்தது

சனி 16, மே 2020 1:26:35 PM (IST)

உலக அளவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 46,29,407 -ஆக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 3,08,876 ஆக உயர்ந்துள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

உலகிலேயே அமெரிக்காவில் தான் மிக அதிகமான பாதிப்பும், பலியும் நிகழந்துள்ளது. அங்கு இதுவரை 14,84,285 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 88,507 பேர் உயிரிழந்துள்ளனர்    . அதே நேரத்தில் 3,27,751 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதிப்பை பொறுத்தவரை ரஷ்யா இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2,62,843 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் 2,38,004 பேர், ஸ்பெயினில் 2,30,183 பேர், இத்தாலியில் 2,23,885 பேர், பிரேசில் 218,223 பேர், பிரான்சில் 1,79,630 பேர், ஜெர்மனியில் 1,75,233 பேர், துருக்கியில் 1,46,457 மற்றும் ஈரானில் 1,16,635 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், உலகளவில் தொற்று பலி எண்ணிக்கையில் பிரிட்டன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை அதிகபட்சமாக 33,998 பேர் பலியாகியுள்ளனர். அடுத்த இடங்களில் இத்தாலியில் 31,610 பேர், பிரான்சில் 27,532 பேர், ஸ்பெயினில் 27,459, மற்றும் பிரேசில் 14,817 பேர் பலியாகியுள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory