» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தெருக்களில் கிருமி நாசினி தெளிப்பதால் கரோனா வைரஸ் அழியாது: பொதுமக்களுக்குத்தான் பாதிப்பு..?

ஞாயிறு 17, மே 2020 9:44:43 PM (IST)தெருக்களில் கிருமி நாசினி தெளிப்பதால் கரோனா வைரசை அழிக்க முடியாது; அதே வேளையில் கிருமி நாசினிகள் அதிக அளவு சாலையில் தெளிப்பது மக்களின் உடல் நலனுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்து வருகின்றன. அதில் நோய் பரவாமல் தடுக்க தெருக்களில் கிருமி நாசினி மற்றும் மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. ஆனால் தெருக்களில் கிருமி நாசினி தெளிப்பதால் கரோனா வைரசை அழிக்க முடியாது என்பதை உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு கூறி இருப்பதாவது: தெருக்கள் மற்றும் மார்க்கெட் போன்ற பகுதிகளில் கிருமி நாசினி மற்றும் மருந்துகள் தெளிப்பதால் கரோனா வைரஸ் அல்லது மற்ற நோய் கிருமிகளை அழிக்க முடியாது. ஏனென்றால் கிருமி நாசினிகள் அழுக்கு மற்றும் குப்பைகளால் செயலிழக்கப்படுகின்றன. 

நோய் கிருமிகளை செயல் இழக்க செய்யும் நேரத்திற்குள் அனைத்து பகுதிகளிலும் ரசாயன தெளிப்பு அனைத்து மேற்பரப்புகளையும் போதுமானதாக செல்ல வாய்ப்பில்லை. அதே வேளையில் கிருமி நாசினிகள் அதிக அளவு சாலையில் தெளிப்பது மக்களின் உடல் நலனுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். அதேபோல் எந்த சூழ்நிலையிலும் தனி நபர்கள் மீது கிருமி நாசினி தெளிக்க பரிந்துரைக்கப்படவில்லை. மக்கள் மீது கிருமி நாசினி தெளித்தால் உடல் பாதிப்புகள் ஏற்படும். இது உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தீங்கை விளைவிக்கும் மற்றும் பாதிக்கப்பட்ட நபரின் நீர்த்துளிகள் மற்றும் தொடர்பு மூலம் வைரசை பரப்பும் திறனை குறைக்காது.

மக்கள் மீது குளோரின் மற்றும் பிற நச்சு ரசாயனத்தை தெளிப்பது கண், தோல் எரிச்சல், மூச்சு குழாய் அழற்சி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். கிருமி நாசினி பயன்படுத்த வேண்டுமென்றால் ஒரு துணியால் செய்யப்பட வேண்டும். கிருமி நாசினி நனைக்கப்பட்ட துணியால் துடைக்க வேண்டும். வைரஸ் பலவகையான மேற்பரப்புகளில் பல நாட்கள் இருக்கக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனாலும் அந்த அதிகபட்ச காலங்கள் கோட்பாட்டு ரீதியானவை.


மக்கள் கருத்து

உண்மமே 18, 2020 - 12:47:18 PM | Posted IP 162.1*****

பூச்சி , பூரான் , பாம்பு , தவளை, எல்லாம் வீட்டுக்குள்ளே புகுந்து விடும்

தமிழ்ச்செல்வன்மே 18, 2020 - 11:14:32 AM | Posted IP 162.1*****

அப்புறம் எப்படி கள்ள கணக்கு எழுதி சுருட்ட முடியும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory