» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மலேரியா மருந்தை சாப்பிட்டால் டிரம்ப் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்‍ : சபாநாயகர் கவலை

புதன் 20, மே 2020 11:43:39 AM (IST)

டொனால்டு டிரம்ப் தற்போது மலேரியாவுக்கான மருந்தை எடுத்துக் கொள்வதால் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என சபாநாயகர் நான்சி பெலோசி கூறி உள்ளார்.

கரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள மலேரியாவுக்கான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை எடுத்து வருவதாக டிரம்ப் வெளியிட்ட தகவலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் எதிரியாக கருதப்படும் சபாநாயகர் நான்சி பெலோசி கடுமையாக விமர்சித்துள்ளார்.ஏற்கனவே பருத்த உடலமைப்பை கொண்ட டொனால்டு டிரம்ப் தற்போது அந்த மருந்தை எடுத்துக் கொள்வதால் அவர் உயிருக்கு ஆபத்து  ஏற்படலாம் என நான்சி கவலை தெரிவித்துள்ளார்.

சி.என்.என் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், அவர் நமது நாட்டின் அதிபர், விஞ்ஞானிகளால் இதுவரை அங்கீகரிக்கப்படாத மருந்தை தற்காப்புக்காக அவர் எடுக்க மாட்டார் என்று நான் விரும்புகிறேன் என்றார். குறிப்பாக அவரது வயதுடையவர்கள், அதுவும் பருத்த உடல் அமைப்பை கொண்ட அவர் குறித்த மருந்தை உட்கொள்வது ஒரு நல்ல யோசனை அல்ல என்று நான் நினைக்கிறேன் என்றார்.

2019 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட மருத்துவக் குறிப்பில், அதிபர் டிரம்ப் உடல் பருமன் அதிகம் கொண்டவர் எனவும் ஆனால் ஆபத்தான நிலையில் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.இந்த மருத்துவக்குறிப்பை சுட்டிக்காட்டியே சபாநாயகர் நான்சி பெலோசி தற்போது டொனால்டு டிரம்பை விமர்சித்துள்ளார். மட்டுமின்றி அதிபரின் கூற்றுக்குப் பின்னர் அமெரிக்கா முழுவதும் உள்ள மருத்துவர்கள் ஆழ்ந்த கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory