» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவில் இருந்து ஊடுருபவர்களால் கரோனா பாதிப்பு அதிகரிப்பு : நேபாள பிரதமர் குற்றச்சாட்டு

செவ்வாய் 26, மே 2020 10:32:04 AM (IST)

இந்தியாவில் இருந்து ஊடுருபவர்கள் மூலம்தான் தங்கள் நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரிக்கிறது என நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி மீண்டும் குற்றம்சாட்டினர்.

ஏற்கெனவே, சில நாள்களுக்கு முன்பு,  "சீன, இத்தாலி வைரûஸ விட இந்திய வைரஸ் மிகவும் ஆபத்தானது என்று அவர் நேபாள நாடாளுமன்றத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது நேபாளத்தில் கரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு குறைவாகவே உள்ளது. உரிய மருத்துவப் பரிசோதனையில்லாமல் இந்தியாவில் இருந்து ஊடுருபவர்கள் மூலம்தான் நேபாளத்தில் கரோனா பாதிப்பு அதிகரிக்கிறது என்றார்.

நேபாளத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கம் ஜூன் 2-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நோய்த்தொற்றால் திங்கள்கிழமை மேலும் 79 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால், அந்நாட்டில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 682-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 4 பேர் கரோனாவால் உயிரிழந்தனர். முன்னதாக, இந்திய - நேபாள எல்லையில் உள்ள காலாபானி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகளை தங்கள் எல்லைக்குள் இணைத்து நேபாள அரசு வரைபடம் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory