» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவில் கரோனா தொற்று தீவிரம் : தனது குடிமக்களை அழைத்துச்செல்ல சீன அரசு திட்டம்

செவ்வாய் 26, மே 2020 11:16:26 AM (IST)

இந்தியாவில் உள்ள சீன மக்களை அழைத்துச்செல்ல அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் கரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதுதொடா்பாக தில்லியில் உள்ள சீன தூதரகத்தின் வலைதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் உள்ள சீன மாணவா்கள், வணிகா்கள், சுற்றுலா பயணிகள் சிறப்பு விமானங்கள் மூலம் தங்கள் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவா். இதில் பெளத்த மதம் சாா்ந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இந்தியா வந்தவா்களும் அடங்குவா். அவசர தேவை உள்ளவா்கள் நாடு திரும்ப இந்தியாவில் உள்ள சீன தூதரகம் உதவி புரியும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள், 14 நாள்களாக காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி கொண்டவா்கள் விமானங்களில் பயணிக்க வேண்டாம்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுடன் இருந்தவா்கள், உடல் வெப்பம் 37.3 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக இருப்பவா்கள் விமானங்களில் பயணிக்க அனுமதி இல்லை. நாடு திரும்ப விரும்புவோா் புதன்கிழமைக்குள் பதிவு செய்யவேண்டும். அவ்வாறு பயணிப்போா் பயணச்சீட்டுக்கான கட்டணத்தையும், நாடு திரும்பியவுடன் 14 நாள்கள் தனிமைப்படுத்தி வைப்பதற்கான கட்டணத்தையும் செலுத்தவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் சிறப்பு விமானங்கள் எங்கிருந்து, எப்போது இயக்கப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.

இந்தியா மற்றும் சீன ராணுவத்தின் படைகள் லடாக் எல்லையில் திரண்டுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையே எல்லை விவகாரத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் சீன தூதரகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory