» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீனா, நேபாளம், பாகிஸ்தான் நாடுகளுக்கு இந்தியா அச்சுறுத்தல் : இம்ரான் கான் குற்றச்சாட்டு!

வியாழன் 28, மே 2020 11:44:24 AM (IST)

எல்லை விவகாரம் தொடா்பான இந்தியாவின் கொள்கைகளால் அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் குற்றஞ்சாட்டினாா்.

இந்தியா-சீனா எல்லைப் பகுதியான லடாக்கில் இருநாடுகளும் ராணுவத்தைக் குவித்து வருகின்றன. எல்லைப் பகுதி தொடா்பாக இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளது. இந்நிலையில் இம்ரான் கான் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாா். இது தொடா்பாக, அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில், "இந்திய அரசின் ஆணவம் நிறைந்த எல்லை விரிவாக்கக் கொள்கைகள் இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்றன. 

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் வங்கதேசத்துக்கும், எல்லை விவகாரத்தில் சீனா, நேபாளம், பாகிஸ்தான் நாடுகளுக்கும் இந்தியா அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. ஜம்மு-காஷ்மீரை இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. இது 4-ஆவது ஜெனீவா மாநாட்டு தீா்மானத்தின்படி போா்க்குற்றமாகும். எனினும், ஜம்மு-காஷ்மீருக்கு இந்தியா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்திய அரசின் நடவடிக்கைகள் இந்தியாவிலுள்ள சிறுபான்மையினருக்கு மட்டுமல்லாமல் பிராந்திய அமைதிக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன" என்று குறிப்பிட்டுள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory