» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் போலீசுக்கு 7 மாதம் சிறை

செவ்வாய் 7, ஜூலை 2020 10:35:46 AM (IST)

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் போலீசுக்கு 7 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம்  உத்தரவிட்டது.

சிங்கப்பூரில் பெண் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹேமாவதி குணசேகரன் (37). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சக போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட 2 ஐபேடுகளை அவர்களுக்குத் தெரியாமல் அடகு கடையில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். பல நாட்கள் ஆகியும் ஹேமாவதி குணசேகரன் அந்த ஐபேடுகளை திரும்ப பெறாததால் அடகுக் கடைக்காரர் அவற்றை விற்பனை செய்துவிட்டார்.

இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததை தொடர்ந்து ஹேமாவதி குணசேகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை சிங்கப்பூர் நீதிமன்றத்தி நடந்து வந்தது. இதில் ஹேமாவதி குணசேகரனன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி இந்த வழக்கில் நேற்று தனது தீர்ப்பை வழங்கினார். அவர் ஹேமாவதி குணசேகரனுக்கு 7 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory