» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் ஒட்டிப் பிறந்த சகோதரர்கள் 68 வயதில் மரணம்: சக்கர நாற்காலியிலேயே முடிந்த வாழ்க்கை!

செவ்வாய் 7, ஜூலை 2020 5:33:52 PM (IST)அமெரிக்காவில் ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரர்கள் தங்களது 68 வயதில் மறைந்தனர். அவர்களது சவாலான வாழ்க்கை, சக்கர நாற்காலியிலேயே முடிந்தது. 

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தின் பீவர் க்ரீக்கைச் சேர்ந்த இரட்டை சகோதரர்களான ரோனி மற்றும் டோனி கலியன் ஆகியோர் அக்டோபர் 28, 1951ல் பிறந்தனர். கடந்த 2014ம் ஆண்டில், சகோதரர்கள் இருவரும் தங்களது 63வது பிறந்தநாளை கொண்டாடும்போது, உலகின் மிகப் பழமையான இணைந்த இரட்டையர் என்ற பெருமையைப் பெற்றனர். தற்போது 68 வயதான இருவரும், டேட்டனில் உள்ள நல்வாழ்வு பராமரிப்பு மையத்தில் தங்கியிருந்து ஓய்வெடுத்து வந்தனர்.

இந்நிலையில், ஒரே உடலை பெற்று வாழ்ந்து வந்த இருவரும் இறந்ததாக நலவாழ்வு பராமரிப்பு மையம் அறிவித்தது. இதனை அவர்களது சகோதரர் ஜிம் உறுதிபடுத்தினார். ஒட்டிப் பிறந்து குழந்தைகளாக வாழ்க்கையை தொடங்கிய சகோதரர்கள் இருவரும், திருவிழாக்கள் மற்றும் சர்க்கஸ்களில் சைட் ஷோ நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவாய் ஈட்டி வாழ்ந்தனர். அவர்களது சகோதரர் ஜிம், தங்களது குடும்பத்தை இரட்டை சகோதரர்கள் காப்பாற்றி வந்ததாக தெரிவித்தார். டி.எல்.சி அமைப்பு 2010ல் இவர்களைப் பற்றிய ஆவணப்படத்தை ஒளிபரப்பியது. 

சகோதரர்கள் இருவரும் 1991ம் ஆண்டில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் இருந்து ஓய்வு பெற்றனர். 2010ம் ஆண்டு முதல் தனியாக வாழ்ந்தனர். உடல்நலப் பிரச்னைகள் காரணமாக குடும்ப உறுப்பினர்களுடன் சில காலம் வாழ்ந்தனர். சக்கர நாற்காலியில் வாழ்க்கையை 68 வருடங்களாக நடத்திய இந்த சகோதரர்கள் மறைவு, அவர்களின் சொந்தங்கள் மற்றுமின்றி அனைருக்கும் சவாலான வாழ்க்கை பாடமாக இருந்துள்ளது என்று, அவர்களது நண்பர்கள் தெரிவித்தனர். முன்னதாக டேட்டன் நகர சமூகம், இவர்களுக்காக நிதி திரட்டியது மற்றும் அவர்களின் புதிய வீட்டை புதுப்பிக்க உதவியது என்று டேட்டன் டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory