» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல்: சீனா பகிரங்க குற்றச்சாட்டு

வியாழன் 9, ஜூலை 2020 4:09:43 PM (IST)

உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது "சர்வதேச தொற்றுநோய்க்கு எதிரான முயற்சிகளை பின்னடைவை ஏற்படுத்தும் சீனா குற்றச்சாட்டி உள்ளது.

உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுகிறோம் என்பதற்கான அறிவிப்பு கடிதத்தை ஐ.நா. சபையில் அமெரிக்கா வழங்கியுள்ளது. இதை ஐ.நா. சபையும் உறுதி செய்துள்ளது. உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவதற்கான முடிவு குறித்து சீனா குற்றஞ்சாட்டி உள்ளது.இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியதாவது: இந்த நடவடிக்கை "அமெரிக்கா ஒருதலைப்பட்சமான நடவடிகைகளை பின்பற்றுதல், அணிகளிடமிருந்து விலகுதல் மற்றும் ஒப்பந்தங்களை மீறுதல் ஆகியவற்றின் மற்றொரு நிரூபணம் ஆகும் 

உலக சுகாதார அமைப்பு என்பது உலகளாவிய பொது சுகாதார பாதுகாப்பு துறையில் மிகவும் அதிகாரப்பூர்வ மற்றும் தொழில்முறை சர்வதேச நிறுவனம் ஆகும். இந்த அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது "சர்வதேச தொற்றுநோய்க்கு எதிரான முயற்சிகளை பின்னடைவை ஏற்படுத்தும், குறிப்பாக சர்வதேச ஆதரவின் அவசர தேவையில் வளரும் நாடுகளில் கடுமையான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என கூறினார்.


மக்கள் கருத்து

appaviJul 11, 2020 - 03:37:44 PM | Posted IP 162.1*****

saniyan pidicha chinakara naikala unga kedu ketta thanathala ithana uyira pali koduthathu pathalayada. unga naadu ulagathuke keduda.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory