» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஒபாமா, பில்கேட்ஸ் உள்ளிட்ட உலக தலைவர்கள் ட்விட்டர் கணக்குகளை முடக்கிய மர்ம கும்பல்!

வியாழன் 16, ஜூலை 2020 12:48:09 PM (IST)அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, பில்கேட்ஸ் உள்ளிட்ட உலக தலைவர்களின் டுவிட்டர் கணக்குகளை மோசடி கும்பல் ஹேக் செய்துள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா, வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடன், உலக பணக்காரர்களில் ஒருவரான் பில்கேட்ஸ் உள்ளிட்ட உலகத் தலைவர்களின் டுவிட்டர் கணக்குகளை மோசடி கும்பல் திடீரென ஹேக் செய்தது. அதேபோல் ஆப்பிள் போன்ற முன்னணி நிறுவனங்களில் கணக்குகளையும் ஹேக் செய்துள்ளனர். அவர்களுடைய பக்கத்தில் ‘‘நாங்கள் உங்களுக்கு பிட்காய்ன் மூலம் இரண்டு பணம் வழங்குகிறோம். நீங்கள் ஆயிரம் டாலர் அனுப்பினால், 2 ஆயிரம் டாலர் திரும்ப வழங்குவோம். 30 நிமிடத்திற்குள் திரும்ப வழங்கப்படும் என்று’’ பதிவிட்டு ஒரு பிட்காய்ன் லிங்கையும் அனுப்பியுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory