» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வடகொரியா மண்ணில் இனி போருக்கு இடமில்லை: அதிபர் கிம் ஜாங் உன் உறுதி

புதன் 29, ஜூலை 2020 5:20:37 PM (IST)

"அணு ஆயுதம் பலம் பொருந்திய நாடாக வடகொரியா உள்ளதால் இனி இந்த மண்ணில் போர் இருக்காது" என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

கிழக்காசிய நாடான வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ,சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி, அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தினார். வடகொரியா மீது அமெரிக்கா பல பொருளாதார தடைகளை விதித்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப் - கிம் ஜாங் உன் பேச்சுவார்த்தைகள் நடந்தும் பலனளிக்காமல் போனது.தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை, நடத்தத் தொடங்கியது வடகொரியா.

இந்நிலையில் தென்கொரியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதன் 67-வது ஆண்டு தினத்தையொட்டி போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் மத்தியில் அதிபர் கிம் ஜாங் உன் பேசியது, எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளவே வடகொரியா அணு ஆயுதங்களை தயாரிக்கிறது. தற்போது அணு ஆயுத சக்தியில் பலம் பொருந்திய நாடாக வடகொரியா உள்ளது. நாட்டின் பாதுகாப்பும், எதிர்காலமும் உறுதி செய்யப்பட்டுள்ளதால் இனி இந்த மண்ணில் போர் இருக்காது.இவ்வாறு கிம் ஜாங் உன் பேசினார். கிம் ஜாங் உன்னின் இந்த பேச்சு உலக நாடுகள் நம்பும் விதமாக இருக்குமா என்பது இனி வரும் காலங்களில் தெரியும் என கொரியா நியூஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Tirunelveli Business Directory