» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரபேல் விமானங்கள் நிறுத்தப்பட்ட விமானத்தளம் அருகே ஈரான் ஏவுகணை தாக்குதல்?

புதன் 29, ஜூலை 2020 5:24:16 PM (IST)இந்தியாவின் ரபேல் போர் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல் தாப்ரா விமானப்படை தளம் அருகே ஈரானிய ஏவுகணைகள் விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

ஐரோப்பிய நாடான, பிரான்சில் இருந்து, 59 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 36 அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்க, நான்கு ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது.இவற்றில், முதல்கட்டமாக, ஐந்து ரபேல் விமானங்கள், பிரான்சில் இருந்து, நேற்று முன் தினம் புறப்பட்டன. 7 ஆயிரம் கி.மீ பயணத்தின் இடையே ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல் தாப்ரா விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.

விமானம் நிறுத்தப்படுவதற்கு முன் ஈரான் ஏவுகணை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானத்தளம் குறி வைக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு அல் தாப்ரா மற்றும் கத்தார் நாட்டில் உள்ள அல் உதய்த் விமானப்படை தளங்களுக்கு அருகே ஈரானிய ஏவுகணைகள் விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஏவுகணை தாக்குதல்கள், ஈரானிய ராணுவத்தின் பயிற்சிகளாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory