» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சிங்கப்பூரில் 5 தமிழர்கள் உட்பட 37 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

புதன் 29, ஜூலை 2020 5:29:24 PM (IST)பிரதமர் லீ சியென் லூங் தலைமையிலான அமைச்சரவையில் 5 தமிழர்கள் உட்பட 37 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

கரோனா தொற்றுக்கு மத்தியில் சிங்கப்பூரில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பிரதமர் லீ சியென் லூங் தலைமையில் அமைந்த மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இத்தேர்தல் மூலம் 93 எம்பி.,க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் பிரதமர் லீ சியென் லூங் வெள்ளிக்கிழமை தனது புதிய அமைச்சரவையை அறிவித்தார். 

அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 37 பேரில் 9 பேர் பெண்கள் ஆவர். இந்த ஆண்டு முதன்முறையாக இஸ்தானா, நாடாளுமன்றம் என 2 இடங்களில் பதவிப்பிரமாணம் நடைபெற்றது. அதிபர் ஹலிமா உரை நிகழ்த்தி பதவியேற்புச் சடங்கைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து சிங்கப்பூரின் பிரதமர் லீ சியென் லூங் பதவி ஏற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட், நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். லீ சியென் தலைமையிலான அமைச்சரவையில் 5 தமிழர்கள் உள்பட 37 பேர் பதவியேற்றுள்ளனர்.

தமிழர்கள்:
  • தர்மன் சண்முகரத்னம் மூத்த அமைச்சராகவும் சமுதாய கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.
  • கா.சண்முகம், எஸ்.ஈஸ்வரன், டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் கடந்த அமைச்சரவையில் வகித்த பதவிகளைத் தொடர்ந்து வகிக்கின்றனர்.
  • இந்திராணி ராஜா பிரதமர் அலுவலக அமைச்சராகத் தொடர்வதுடன் தேசிய வளர்ச்சி, நிதி ஆகியவற்றின் இரண்டாம் அமைச்சராக பதவியேற்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory