» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்திய பகுதிகளை இணைத்து புதிய வரைபடம் : பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்!

புதன் 5, ஆகஸ்ட் 2020 1:38:12 PM (IST)



பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை முற்றிலும் நிராகரித்துள்ள மத்திய அரசு, இதுதொடர்பாக கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது.
 
ஒட்டுமொத்த காஷ்மீர் மாநிலத்தையும், பஞ்சாப்பின் சில பகுதிகளையும் இணைத்து பாகிஸ்தான் புதிய வரைபடம் உருவாக்கி உள்ளது. இதை வெளியிட்ட பிரதமர் இம்ரான்கான், இதற்கு தனது அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருப்பதாகவும், இது பாகிஸ்தான் மக்களின் லட்சியத்தை குறிப்பதாகவும் கூறினார். இந்நிலையில், பாகிஸ்தானின் இந்த வரைபடத்தை முற்றிலும் நிராகரித்துள்ள மத்திய அரசு, இது தொடர்பாக கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், அரசியல் வரைபடம் என்ற பெயரில் பிரதமர் இம்ரான்கான் வெளியிட்டுள்ள வரைபடத்தை நாங்கள் பார்த்தோம். இது ஒரு அரசியல் அபத்தமான நடவடிக்கை. மேலும், இந்தியாவின் குஜராத் மற்றும் எங்களின் காஷ்மீர் லடாக் யூனியன் பிரதேசங்களை உரிமை கோருவதை ஏற்கமுடியாது. இந்த அபத்தமான கூற்றுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலோ,, சர்வதேச நம்பகத்தன்மையிலோ இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST




Tirunelveli Business Directory