» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இங்கிலாந்தில் செப்டம்பரில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் - பிரதமர் போரிஸ் ஜான்சன்

திங்கள் 10, ஆகஸ்ட் 2020 5:13:56 PM (IST)

இங்கிலாந்தில் செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.

சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கரோனா வைரஸ் 210-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இங்கிலாந்தில் செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக போரிஸ் ஜான்சன் கூறியுள்ளதாவது: கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இங்கிலாந்தில் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது இங்கிலாந்தில் கரோனா தொற்று குறைந்து வருகிறது. இனி மேலும் பள்ளிகளை மூடுவது நல்லதல்ல. பள்ளிகளில் மாணவர்கள் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி போன்ற பாதுகாப்பான விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். மாணவர்களின் பள்ளிப் படிப்பு தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது.

இனி ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டாலும் பள்ளிகள் மூடல் என்பது கடைசி பட்சமாக இருக்கும். மாணவர்கள் தங்கள் கல்வியை தவறவிட்டால் நாடு பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்ளும். எனவே கரோனா பரவல் முற்றிலும் குறையாமல் இருந்தாலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து பள்ளிகளில் மாணவர்கள் தங்கள் படிப்பினை தொடர வேண்டும் என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUST



Tirunelveli Business Directory