» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உலகின் முதல் கரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த ரஷ்யா: மகளுக்கும் செலுத்தியதாக புதின் தகவல்

செவ்வாய் 11, ஆகஸ்ட் 2020 4:12:00 PM (IST)

புதிதாக கண்டுபிடித்துள்ள கரோனா வைரஸ் தடுப்பூசியை மகள் உள்ளிட்டோருக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என ரஷிய அதிபர் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், ஒவ்வொரு நாடுகளும் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பகல் இரவாக பாடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ‘‘இன்று காலை உலகின் முதன் முறையாக கரோனா வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசி ரஷியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி எனது மகள் உடலில் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார். பரிசோதனை முடிவில் இந்த தடுப்பூசி கரோனா வைரஸ்க்கு எதிராக நிலையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 2 ஆண்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்

ரஷியா கண்டுபிடித்துள்ள கரோனா தொற்றுக்கான தடுப்பூசி இரண்டு ஆண்டுகள் வரை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

காமலேயா ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசிக்கு ரஷிய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்தது.இது குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பில், இரண்டு கட்டங்களாக போடப்படும் இந்த தடுப்பூசி மூலம் இரண்டு ஆண்டுகள் வரை நோய் எதிர்ப்பு சக்தி உருவாக உதவியாக இருக்கும். இந்த தடுப்பூசியை விலங்குகள் மீது சோதனை செய்யப்பட்டு, பின்னர் இரண்டு குழு தன்னார்வலர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory