» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்கா துணை அதிபர் தேர்தல் : வேட்பாளராக இந்திய தமிழ் வம்சாவளி பெண் தேர்வு!

புதன் 12, ஆகஸ்ட் 2020 1:28:11 PM (IST)

அமெரிக்காவில் துணை அதிபருக்கான தேர்தலில் இந்திய தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலாதேவி ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
 
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3 ஆம் தேதி திட்டமிடப்படி நடைபெறவுள்ளது. இதில், குடியரசுக் கட்சி வேட்பாளராக, தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலாதேவி ஹாரிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். 

அவர் வெற்றி பெற்றால் நாட்டின் துணை அதிபராகும் முதல் பெண் என்ற பெருமையை பெறுவார். துணை அதிபராகும் முதல் இந்திய-அமெரிக்க-ஆப்ரிக்க பெண்ணாகவும் அவர் இருப்பார். ஜோ பிடன், பெண் ஒருவரை தான் துணை அதிபராக தேர்வு செய்வேன் என ஏற்கெனவே கூறி இருந்தார். இந்தச் சூழலில் கலிப்போர்னியா மாகாண செனட்டராக இருக்கும் கமலா ஹாரீஸை துணை அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சியின் வேட்பாளராக நியமிப்பதாக அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஜோ பிடன் அறிவித்துள்ளார். நாட்டை மீண்டும் சரியான பாதைக்கு அழைத்துச் செல்ல தனக்கு சரியான இணையாக கமலா ஹாரீஸ் இருப்பார் என்று ஜோ பிடன் கருத்து தெரிவித்துள்ளார். 

துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள கமலா ஹாரீஸ், தன் வாழ்நாளை அமெரிக்காவுக்காக போராடுவதில் கழித்த ஜோ பிடனால் நாட்டு மக்களிடம் ஒற்றுமையைக் கொண்டு வர முடியும். ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக ஜோ பிடனுடன் இணைந்து களம் காண்பது பெருமைக்குரியது என தெரிவித்துள்ளார். கமலா ஹாரீஸ், ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பின்னர், வாபஸ் பெற்றார்.

சென்னையில் வசித்த கமலாதேவி ஹாரிஸ்
கமலாதேவி ஹாரிஸ் சென்னையை சேர்ந்தவர். தனது சிறு வயதில் சென்னையில் உள்ள பெசன்ட் நகரில் வசித்திருந்தார். இவரது தாய் சியாமளா தமிழ்ப் பெண். தந்தை ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர். தனது இளமைப் பருவத்தை நெருங்கும்போது தன் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். தற்போது கலிபோர்னியாவில் கமலா தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

கமலா ஹாரீஸ், 2016 ஆம் ஆண்டு கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கு தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்க செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. இதற்கு முன்பு கலிபோர்னியா மாகாணத்தில் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்தவர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST




Tirunelveli Business Directory