» செய்திகள் - விளையாட்டு » உலகம்

எச்1பி விசா விதிகளில் புதிய தளர்வுகள்: ஏற்கெனவே பணியாற்றியவர்களுக்கு அமெரிக்கா அழைப்பு!

வியாழன் 13, ஆகஸ்ட் 2020 3:43:14 PM (IST)

ஏற்கெனவே வேலை பார்த்தவர்கள் எச் 1 பி விசா மூலம் மீண்டும் வந்து பணியாற்றலாம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு எச்-1 பி விசா வழங்கப்படுகிறது. இந்த எச்-1 பி விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்று வருகின்றனர். அமெரிக்க வேலை அமெரிக்கர்களுக்கு என்று முழங்கி வரும் அதிபர் டிரம்ப், எச் 1 பி விசாவில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார். இதனால், எச் 1 பி விசாதாரர்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

இந்த நிலையில், எச் 1 பி விசா கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை டிரம்ப் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.  இதன்படி, ஏற்கெனவே வேலை பார்த்தவர்கள்  எச் 1 பி விசா மூலம் மீண்டும் அமெரிக்கா திரும்பி பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  எச் 1 பி  விசா ஊழியர்கள் தங்களது மனைவி, பிள்ளைகளையும் அழைத்து வரலாம் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory