» செய்திகள் - விளையாட்டு » உலகம்

50 நாடுகளுடன் பயணிகள் விமான போக்குவரத்து துவங்கியது சீனா!

வெள்ளி 14, ஆகஸ்ட் 2020 12:33:41 PM (IST)

சீனாவில் வெளிநாடுகளுடனான சிவில் விமான போக்குவரத்து தொடங்கி நடந்து வருவதாக சிவில் விமான போக்குவரத்து துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதாரம், பொருளாதாரம் என இரண்டையுமே சின்னாபின்னமாக்கிய கரோனா வைரஸ் தொற்றை பரப்பி விட்டு, இப்போது சீனா தன் நாட்டில் அதை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. இந்த தொற்று பரவலைத்தொடர்ந்து சர்வதேச விமான சேவை பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. ஆனால் சீனாவில் வெளிநாடுகளுடனான சிவில் விமான போக்குவரத்து தொடங்கி நடந்து வருகிறது

அங்கு இப்போது 50 நாடுகளுடன் பயணிகள் விமான சேவை நடந்து வருகிறது. இதுபற்றி சீன சிவில் விமான போக்குவரத்து துணை இயக்குனர் உ ஷிஜி கூறுகையில், ஆகஸ்டு 12-ந் தேதி நிலவரப்படி, 50 நாடுகளுடனும், பிராந்தியங்களுடனும் சீன சிவில் விமான போக்குவரத்து நடந்து வருகிறது. 93 விமான நிறுவனங்கள் (19 சீன நிறுவனங்கள், 74 அன்னிய நிறுவனங்கள்) 210 திரும்பும் விமான சேவையையும், 187 வழக்கமான தடங்களில் வாரம்தோறும் மேற்கொள்கின்றன என தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory