» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹைடு சுகா தேர்வு - பிரதமர் மோடி வாழ்த்து

புதன் 16, செப்டம்பர் 2020 5:04:40 PM (IST)

ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹைடு சுகா இன்று தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

ஜப்பானின் பிரதமராக இருந்த அப்பே ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அவர் இடத்துக்கு சுகா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இந்திய ஜப்பானிய உறவை புதிய வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல இணைந்து பணியாற்ற வாய்ப்பை எதிர்நோக்கி இருப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

தன்னுடைய வாழ்த்துச் செய்தியை ஜப்பானிய மொழியிலேயே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.யோஷிஹைடு சுகா ஜப்பானில் தற்பொழுது ஆளும் கட்சியாக உள்ள லிபரல் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர். இதற்கு முன்னர் ஜப்பானிய தகவல்தொடர்பு குழித்துறை விவகார அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார் அத்துடன் ஜப்பானிய அமைச்சரவை செயலாளராக நீண்ட காலம் பணியாற்றியவர். அவரது அனுபவம் ஜப்பானிய அரசு திறம்பட நடத்த உதவும் என்று நம்பப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory