» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பயணிகளுக்கு கரோனா எதிரொலி: ஏர் இந்தியா விமானங்களுக்கு தடை விதித்த துபாய் அரசு!

வெள்ளி 18, செப்டம்பர் 2020 12:45:54 PM (IST)

2 பயணிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஏர் இந்தியா விமானங்கள் வந்து செல்வதற்கு துபாய் அரசு தடை விதித்துள்ளது.

இந்தியாவில் இருந்து  துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் 15 நாட்கள் பறக்க துபாய் அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் இருந்து துபாய் சென்ற விமானங்களில் பயணித்த பயணிகளில் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, வரும் அக்டோபர் 3 ஆம் தேதி வரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் பறக்க தடை விதித்து துபாய் விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. 

மேலும், மீண்டும் கரோனா பாதித்த பயணிகளை விமானத்தில் ஏற்றி வருவதை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய முழு விவரத்தையும் தாக்கல் செய்யுமாறும் துபாய் அரசு ஏர் இந்தியாவிடம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory