» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் - உலக வங்கி

வெள்ளி 18, செப்டம்பர் 2020 5:52:47 PM (IST)



கரோனா பரவலால் சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் என உலக வங்கியின் தலைமை பொருளாதார வல்லுநர் கார்மென் ரெய்நர்ட் கூறினார்.

கரோனா பாதிப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமல்லாமல், உலகப் பொருளாதாரமும் கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இதனை மீட்பதற்கான நடவடிக்கைகளில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன.  சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் என உலக வங்கியின் தலைமை பொருளாதார வல்லுநர் கார்மென் ரெய்நர்ட் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், சில மாதங்களாக முடக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், தற்போது உலகப் பொருளாதாரத்தை முழுமையாக மீட்டெடுக்க முடியாது. குறைந்தது 5 வருடங்களாவது ஆகும். வளர்ந்த நாடுகளை விட மற்ற நாடுகளில் கரோனா ஏற்படுத்திய தாக்கம் கூடுதல் ஆண்டுகள் இருக்கும். ஏழை நாடுகள் கரோனாவால் கடுமையான நெருக்கடியை சந்திக்க நேரிடும். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உலக வறுமை விகிதம் கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது என கூறி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUST



Tirunelveli Business Directory