» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீனா திட்டமிட்டு கரோனா வைரஸை பரப்பியது: ஐநா பொதுக்கூட்டத்தில் டிரம்ப் குற்றச்சாட்டு

புதன் 23, செப்டம்பர் 2020 10:25:07 AM (IST)

சீனா திட்டமிட்டு கரோனா வைரஸை பரப்பியதாக ஐநா பொதுக்கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

காணொலி காட்சி வழியாக நடந்த ஐநா பொதுக்கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், 2ஆம் உலகப் போருக்கு பிறகு உலக நாடுகள் மிகப்பெரிய பேரிடரை எதிர்கொண்டு வருவதாக குறிப்பிட்டார். சீனா, தனது நாட்டில் உள்நாட்டு விமான சேவைக்கு தடைவிதித்து விட்டு, வெளிநாட்டு விமான சேவைக்கு அனுமதி வழங்கி கரோனாவை உலகிற்கு பரப்பி லட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தி விட்டதாகவும் சாடினார்.

உலக சுகாதார நிறுவனத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து தவறான தகவல்களை சீனா வெளியிட்டதாகவும் அவர் கூறினார். மேலும் சீனா திட்டமிட்டு கரோனா வைரஸை பரப்பியதாகவும், சீனாவின் இத்தகைய செயல்களுக்கு ஐநா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

kumarSep 23, 2020 - 11:57:24 AM | Posted IP 108.1*****

unmai athu than

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory