» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வங்கி கடன் வழக்கு : லண்டன் உயர்நீதிமன்றத்தில் அனில் அம்பானியிடம் விசாரணை

ஞாயிறு 27, செப்டம்பர் 2020 1:38:56 PM (IST)

சீன வங்கிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கடன் ஒப்பந்த வழக்கு தொடர்பாக அனில் அம்பானியிடம் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தப்பட்டது.

3 சீன வங்கிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கடன் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில், 61 வயதான ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானி மீது லண்டனில் உள்ள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில், அனில் அம்பானியின் சொத்துகள் பற்றிய விவரங்களை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அனில் அம்பானியிடம் காணொலி காட்சி மூலம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மும்பையில் இருந்தபடி அவர் பதில் அளித்தார். அப்போது சீன வங்கிகள் சார்பில் ஆஜரான வக்கீல், அனில் அம்பானியிடம் ஆடம்பரமாக வாழ்வது பற்றியும், அவரிடம் ஆடம்பர கார்கள் இருப்பது பற்றியும் கேள்வி எழுப்பினார். 

அதற்கு அனில் அம்பானி பதில் அளிக்கையில், ஊடகங்களில் வெளியான தகவல்கள் அடிப்படையில் தான் ஆடம்பரமாக வாழ்வதாக கூறப்படுவதாகவும், ஆனால் தான் எளிமையான, ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

ஆமாSep 27, 2020 - 09:31:51 PM | Posted IP 173.2*****

மோடி உங்களுக்கு பைசா போடவில்லையா ??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory