» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஊரடங்கால் நஷ்டம் : 28 ஆயிரம் ஊழியர்களை நீக்க வால்ட் டிஸ்னி பூங்கா முடிவு

புதன் 30, செப்டம்பர் 2020 12:03:10 PM (IST)


   
கொரோனா ஊரடங்கு நஷ்டத்தால் பூங்கா ஊழியர்கள் 28 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய வால்ட் டிஸ்னி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

உலகின் மிகப்பெரிய பொழுதுப்போக்கு பூங்கா வால்ட் டிஸ்னி  பூங்காக்கள் கலிபோர்னியா, புளோரிடா, பாரீஸ், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகிய இடங்களில் உள்ளது. வழக்கமாக இந்த பூங்காக்களில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் வருகைபுரிவதுண்டு. மக்கள் கொண்டாடங்கள் மிகுந்து காணப்படும் இந்த வால்ட் டிஸ்னி பூங்கா கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்று காரணாமாக மூடப்பட்டிருந்தது.

இதனால், பல கோடி கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால், பூங்காவில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதற்கிடையில், புளோரிடாவில் உள்ள வால்ட் டிஸ்னி பூங்கா கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் திறக்கபட்டது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் வருகை பெருமளவு குறைந்துள்ளது. மேலும், எஞ்சிய பூங்காக்கள் இன்னும் திறக்கப்படாததால் அந்நிறுவனம் பல கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், நிலைமையை சமாளிக்கும்வகையில் உலகம் முழுவதும் தனது பூங்காக்களில் வேலை செய்துவரும் ஊழியர்களில் 28 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய வால்ட் டிஸ்னி முடிவு செய்துள்ளது. பணிநீக்கம் செய்யப்படுவர்களில் அனைவரும் அமெரிக்காவில் உள்ள வால்ட் டிஸ்னி பூங்காக்களில் வேலை செய்பவர்கள் என தகவல் வெளியாகியுள்ளதால் ஊழியர்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.

28 ஆயிரம் ஊழியர்களின் பணிநீக்கம் தொடர்பான அறிவிப்பு விரைவில் முறைப்படி வெளியிடப்படும் என வால்ட் டிஸ்னி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST




Tirunelveli Business Directory