» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பக்க விளைவு: கரோனா தடுப்பூசி பரிசோதனையை நிறுத்தியது ஜான்சன் அண்ட் ஜான்சன்

செவ்வாய் 13, அக்டோபர் 2020 12:08:22 PM (IST)

பக்க விளைவு எதிரொலியாக கரோனா தடுப்பூசி பரிசோதனையை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் நிறுத்தியுள்ளது.

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க ஒவ்வொரு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமும் ஒரு தடுப்பூசியை தயாரித்துள்ளது.இந்த தடுப்பூசியை மனித உடலில் செலுத்தி முதல் மற்றும் 2-ம் கட்ட பரிசோதனைகளை முடித்த ஜான்சன் அண்ட் ஜான்சன் 3-ம் கட்ட பரிசோதனையை கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது, தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாத நிலை ஏற்பட்டது.

இதனால் தடுப்பூசி பிரிசோதனையை தற்காலிகமாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுத்தி வைத்துள்ளது. 60 ஆயிரம் பேருக்கு பாதுகாப்பான வகையில் தடுப்பூசி செலுத்தி சோதனை மேற்கொள்ள இருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory