» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உலகின் நீண்ட காலம் ஆட்சியில் இருந்த பிரதமர்: பஹ்ரைன் பிரதமர் அல் கலிபா காலமானார்

புதன் 11, நவம்பர் 2020 5:37:58 PM (IST)

உலகின் நீண்ட காலம் ஆட்சியில் இருந்து சாதனை படைத்த பஹ்ரைன் பிரதமர் கலிபா பின் சல்மான் அல் கலீஃபா இன்று காலமானார். அவரது வயது 84.

உடல்நலக்குறைவு ஏற்பட்டு அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் பஹ்ரைன் பிரதமர் கலிபா பின் சல்மான் அல் கலிபா (Khalifa bin Salman Al Khalifa) சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். 

மருத்துவமனையில் இன்று காலை அல் கலிபா உயிரிழந்தார். பிரதமர் மறைவையடுத்து பஹ்ரைனில் ஒரு வாரத்துக்கு அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 1971ஆம் ஆண்டு பஹ்ரைன் நாட்டு பிரதமராக பொறுப்பேற்றார் அல் கலீஃபா உலகின் நீண்ட காலம் ஆட்சியில் இருந்த பிரதமர் என்ற பெருமைக்குரியகளில் அல் கலிபாவும் ஒருவராவார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory