» செய்திகள் - விளையாட்டு » உலகம்
டிரம்ப் எங்களுடன் ஒத்துழைக்காவிட்டால் கரோனா உயிரிழப்பு அதிகரிக்கும்: ஜோ பைடன் எச்சரிக்கை
செவ்வாய் 17, நவம்பர் 2020 3:40:21 PM (IST)
டொனால்டு டிரம்ப் எங்களுடன் ஒத்துழைக்காவிட்டால் கரோனா உயிரிழப்பு அதிகரிக்கும் என புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கரோனா தடுப்புப் பணிகள் குறித்து அதிபர் டடிரம்ப் நிர்வாகத்தின் மீது புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட ஜோ பைடன் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். டெலாவேரில் உள்ள வில்மிங்டன் நகரில் ஜோ பைடன் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர்கூறியதாவது: அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அதிபர் டிரம்ப் எங்களுடன் ஒத்துழைக்கா விட்டால், இன்னும் அதிகமான மக்கள் உயிரிழக்க நேரிடும். கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் நானும், அதிபர் டிரம்ப்பும் ஒத்துழைத்துச் செயல்படாவிட்டால், அதிகமான அமெரிக்கர்கள் உயிரிழக்க நேரிடும்.
தடுப்பு மருந்து மிகவும் முக்கியமானது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவரை கரோனாவில் தப்பிக்க வாய்ப்பு குறைவுதான். ஆனால், தடுப்பூசி கண்டுபிடித்து நடைமுறைக்கு வந்துவிட்டால், மக்கள் எவ்வாறு தடுப்பூசியைப் பெறுவார்கள், 30 கோடி அமெரிக்க மக்களுக்கும் எவ்வாறு வழங்கப் போகிறீர்கள் எனும் திட்டம் ஏதும் இருக்கிறதா? அதற்காக அரசு என்ன திட்டத்தை வைத்துள்ளது?
மக்களுக்குத் தடுப்பூசி போடுதல் என்பது மிகப்பெரிய பெரிய பணி. முன்னுரிமை அடிப்படையில்தான் மக்களுக்குக் கரோனா தடுப்பூசியை வழங்க வேண்டும். உலக சுகாதார அமைப்புடன் ஒத்துழைத்துதான் இந்தப் பணியை நம்மால் செய்ய முடியும். கரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி தீவிரமான வேகத்தில் செல்கிறது என்று டிரம்ப் நிர்வாகம் தெரிவிக்கிறது. தடுப்பு மருந்து நமது கைக்குக் கிடைத்தால் மட்டும் போதாது. அதை எப்படி மக்களுக்கு வழங்கப்போகிறோம். 2021-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதிவரை காத்திருந்தால், எங்களின் திட்டம் தொடங்கிவிடும். இன்னும் ஒன்றரை மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
இப்போதுள்ள சூழலில் மிகவும் முக்கியமானது, அதிபர் டிரம்ப் எங்களுடன் ஒத்துழைத்துச் செயல்பட்டு, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களிடம் கரோனா தடுப்பு மருந்தை மக்களுக்கு எவ்வாறு வழங்குவது, ஒவ்வொருவருக்கும் எப்படி வழங்குவது, தொழிலாளர்கள், குடியரசுக் கட்சியினர், ஜனநாயகக் கட்சியனர் அனைவருக்கும் எவ்வாறு வழங்குவது எனச் செயல்திட்டம் இருக்கிறது. நான் உங்களிடம் கூறுவது என்னவென்றால், நான் உங்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறேன். நீங்கள் ஒத்துழைத்துச் செயல்பட வேண்டும் என கூறி உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கரோனா அச்சுறுத்தல் எதிரொலி: பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணத்தில் மாற்றம்!
வியாழன் 15, ஏப்ரல் 2021 12:50:25 PM (IST)

தமிழ் புத்தாண்டு : பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து
புதன் 14, ஏப்ரல் 2021 10:22:39 AM (IST)

அமெரிக்காவில் கருப்பின வாலிபர் போலீசாரால் சுட்டுக்கொலை : போராட்டத்தில் வன்முறை வெடித்தது
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 9:05:43 AM (IST)

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய 82 பேர் சுட்டுக்கொலை
திங்கள் 12, ஏப்ரல் 2021 5:35:13 PM (IST)

அலிபாபா நிறுவனத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி அபராதம் : சீனா அரசு நடவடிக்கை
ஞாயிறு 11, ஏப்ரல் 2021 1:00:37 PM (IST)

விடுதலைப்புலிகள் சித்தாந்தத்தை ஊக்குவித்ததாக கைதான யாழ்ப்பாணம் மேயர் ஜாமீனில் விடுதலை
ஞாயிறு 11, ஏப்ரல் 2021 12:56:26 PM (IST)
