» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்திய மீனவர்களை இலங்கை அரசு விரைவில் விடுதலை செய்யும்: அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை

புதன் 6, ஜனவரி 2021 4:41:48 PM (IST)இந்திய மீனவர்களை இலங்கை அரசு விரைவில் விடுதலை செய்யும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இலங்கை சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று அந்த நாட்டு அதிபர் கோத்தபாய ராஜபக்சே, வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை சந்தித்தார். இந்த சந்திப்புகளில் இருதரப்பு உறவுகள், மீனவர்கள் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று இலங்கை அதிகாரப்பூர்வமாக வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து மத்திய அரசு பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளும். இலங்கை கைது செய்திருக்கும் இந்திய மீனவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது. இலங்கையில் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது, 13 அரசியல் சாசன திருத்தம் உட்பட அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வுகள் இலங்கையின் எதிர்கால நலனுக்கு உகந்தது.

இலங்கையும் இந்தியாவும் கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் பொருளாதாரம், கேந்திர பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இணைந்து செயல்படும். இவ்வாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். இலங்கை பயணம் தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்து உபசரித்த வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ்குணவர்த்தனவுக்கு நன்றி. 2021-ம் ஆண்டில் இலங்கைக்குதான் முதல் முறையாக பயணம் செய்திருக்கிறேன். நமது தலைவர்களின் கனவுகளை நிறைவேற்ற இருதரப்பும் இணைந்து செயல்படுவோ என கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory