» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சீனாவில் 5 மாதங்களுக்குப் பிறகு கரோனா அதிகரிப்பு - ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்
திங்கள் 11, ஜனவரி 2021 10:34:22 AM (IST)
சீனாவில் 5 மாதங்களுக்கு பிறகு கரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது என்று தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேசிய சுகாதார அமைப்பு கூறும்போது, "கடந்த ஐந்து மாதம் இல்லாத அளவுக்கு சீனாவில் மீண்டும் கரோனா அதிகரித்து வருகிறது. ஹெபே மாகாணம் மற்று பெய்ஜிங்கில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஹெபே மாகாணத்தில் மட்டும் நேற்று 82 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. லியோனிங் மாகாணத்திலும் கரோனா அதிகரித்து வருவதால் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணத்தில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு விதிக்கப்பட்டது. ஹூபே மட்டுமல்லாமல், சீனாவின் வடக்குப் பகுதிகளிலும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக முதல் தடுப்பூசிக்கு சீனா அனுமதி அளித்தது. முன்னதாக, மருத்துவப் பணியாளர்கள் உட்பட சிறிய குழுவுக்கு 3 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.
அவசர காலப் பயன்பாட்டுக்காக அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அவற்றில் தொற்று ஏற்படும் அபாயம் அதிக அளவில் இருந்தது. இந்த நிலையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பு மருந்து இலவசம் என்று சீனா அறிவித்துள்ளது. சீனா கரோனா தடுப்பு மருந்தான சினோபார்ம் துருக்கி, இந்தோனேசிய, பிலிப்பைன்ஸ் அகிய நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கரோனா பரவலைத் தடுக்க சீனா உள்ளிட்ட நாடுகள் தவறிவிட்டன: நிபுணர் குழு குற்றச்சாட்டு
புதன் 20, ஜனவரி 2021 12:26:34 PM (IST)

நாடு திரும்பிய ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி கைது: அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம்
செவ்வாய் 19, ஜனவரி 2021 11:50:31 AM (IST)

அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபரால் பரபரப்பு
திங்கள் 18, ஜனவரி 2021 8:55:44 AM (IST)

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் : கட்டிட இடிபாடுகளில் சிக்கி 26 பேர் பலி
சனி 16, ஜனவரி 2021 9:18:20 AM (IST)

பாகிஸ்தானில் ஜன.18 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு - அரசு அறிவிப்பு
வெள்ளி 15, ஜனவரி 2021 6:50:44 PM (IST)

அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம்: துணை அதிபர் மைக் பென்ஸ் நிராகரிப்பு
புதன் 13, ஜனவரி 2021 5:06:39 PM (IST)
