» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனா பரவலைத் தடுக்க சீனா உள்ளிட்ட நாடுகள் தவறிவிட்டன: நிபுணர் குழு குற்றச்சாட்டு

புதன் 20, ஜனவரி 2021 12:26:34 PM (IST)

ஆரம்ப கட்டத்திலேயே கரோனா பரவலை தடுக்க உலக நாடுகள் தவறிவிட்டதாக நிபுணர் குழு குற்றம் சாட்டியுள்ளது.

கரோனா பற்றி ஆராய உலக சுகாதார நிறுவனம் ஒரு நிபுணர் குழுவை அமைத்திருந்தது. லைபீரியா நாட்டின் முன்னாள் அதிபர் எல்லன் ஜான்சன் சர்லீப், நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஹெலன் கிளார்க் ஆகியோர் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, நேற்று முன்தினம் தனது அறிக்கையை வெளியிட்டது. 

அதில் கூறப்பட்டு இருப்பதாவது: கரோனா பரவல் தொடங்கிய ஆரம்ப கட்டத்திலேயே அதை கட்டுப்படுத்த சீனாவும், இதர நாடுகளும் தவறி விட்டன. அடிப்படை பொது சுகாதார நடவடிக்கைகளை அமல்படுத்தாமல் விட்டு விட்டன. குறிப்பாக, கடந்த ஆண்டு ஜனவரி மாதம், சீனாவில் பெரிய அளவில் கரோனா பரவத் தொடங்கியபோதே சீனா தனது முயற்சிகளை தீவிரப்படுத்தி இருக்க வேண்டும். மிகக்குறைவான நாடுகளே தங்களுக்கு கிடைத்த தகவலை பயன்படுத்தி, நடவடிக்கை எடுத்தன.

உலக சுகாதார நிறுவனத்தின் அவசர கூட்டம், கடந்த ஆண்டு ஜனவரி 22-ந் தேதி நடந்தது. ஆனால், சர்வதேச அவசரநிலையை அறிவிக்காமல் தாமதித்தது. ஒரு வாரம் கழித்துத்தான் அறிவித்தது. அதுபோல், கரோனாவை ‘சர்வதேச பெருந்தொற்று’ என்று மார்ச் 11-ந் தேதிதான் அறிவித்தது. அதற்குள் பல கண்டங்களிலும் கரோனா பரவி விட்டது. உலக சுகாதார நிறுவனம், கொஞ்சம் முன்கூட்டியே அறிவித்து இருந்தால், அது கரோனாவை தடுக்க உதவி இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory