» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவின் புதிய டிஜிட்டல் விதிமுறைகளை கூகுள் செயல்படுத்தும் : சுந்தர் பிச்சை அறிவிப்பு

வெள்ளி 28, மே 2021 11:42:20 AM (IST)

இந்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய டிஜிட்டல் சட்ட விதிமுறைகளை கூகுள்  விரைவில் செயல்படுத்த உள்ளதாக தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

இந்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய டிஜிட்டல் சட்ட விதிமுறைகளை அமல்படுத்த டிவிட்டர் நிறுவனம் அவகாசம் கோரியுள்ள நிலையில் சுந்தர் பிச்சை இவ்வாறு கூறியுள்ளார். புதிய டிஜிட்டல் விதிமுறைகள் பற்றி கூகுள் நிறுவனம் ஆராய்ந்து வருகிறது. இது குறித்து விரைவில் இந்திய அரசுடன் விவாதிக்கப்படும். அரசு உருவாக்கும் சட்ட விதிமுறைகளை கூகுள் நிறுவனம் மதிக்கிறது. ஆனால் தேவைப்படும் சமயங்களில் சில சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்துவோம் என்று சுந்தர் பிச்சை கூறினார்.

சுதந்திரமான இணைய சேவை என்பது அடிப்படையான விஷயம் என கூறிய அவர் இந்தியாவிற்கு இதற்கு நீண்ட பாரம்பரியம் உள்ளது என சுட்டிகாட்டினார். சுதந்திரமான இணையத்தின் முக்கியத்துவம் பற்றி கூகுல் நிறுவனம் உறுதியாக உள்ளதாகவும் இதைப்பற்றி உலகெங்கும் உள்ள அரசுகளிடம் பேச்சுவார்த்தை தொடரும் என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்தார்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory