» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஈரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீவிபத்து : 3வது நாளாக தீப்பற்றி எரிகிறது

வெள்ளி 4, ஜூன் 2021 11:13:59 AM (IST)



ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அரசுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டு 3வது நாளாக தீப்பற்றி எரிகிறது. 

ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வண்டிகளும் பிற நிபுணர்களும் தீயை அணைப்பதற்கு அனைத்து வகையான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து சமையல் எரிவாயுவை வெளியே கொண்டு செல்லும் ராட்ஷச குழாயில் முதலில் வெடிப்பு ஏற்பட்டது. அந்த வெடிப்பில் இருந்து வெளியான சமையல் எரிவாயு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை பகுதியில் தீப்பற்றி எரிய தொடங்கியது. 

அதனால் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் பல பகுதிகளுக்கும் தீ பரவியது. அந்த தீ எண்ணெய் சுத்திகரிப்பு வாயுவைக் கொண்டு செல்லும் குழாய்களின் வழியாக ஈரானின் தலைநகராகிய டெக்ரானின் தெற்கு பகுதிக்கும் இப்பொழுது பரவியுள்ளது. தீ பற்றி எரியும் குழாய் தொகுப்புக்கு எரிவாயு செல்லவிடாமல் எல்லா இடங்களிலும் அடைக்கப்பட்டுள்ளது. அதனால் இப்பொழுது எரியும் இடங்களுக்கு மேலும் எரிவாயு கிடைக்காது. அதனால் தீ தானாக அணைந்து விடும் என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory