» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சோக்சியை இந்தியாவுக்கு நாடுகடத்தும் முயற்சியில் பின்னடைவு: வழக்கு ஜூலை 1-க்கு ஒத்திவைப்பு!

வெள்ளி 4, ஜூன் 2021 4:45:00 PM (IST)

வைர வியாபாரி சோக்சியை இந்தியாவுக்கு அனுப்ப கோரும் வழக்கு விசாரணையை டொமினிக்கா உயர் நீதிமன்றம் ஜூலை மாதம் முதல் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இந்தியாவில் பஞ்சாப் தேசிய வங்கி 14000 கோடி அளவுக்கு மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய சோக்ஸி மீண்டும் இந்தியாவுக்கு இழுத்து வருவதற்காக இந்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டொமினிக்கா நாட்டில் தற்பொழுது சோக்சியை இந்தியாவுக்கு அனுப்ப கோரும் மனு மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு ஜூலை முதல் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

டொமினிக்கா நாட்டில் இருந்து  மெகுல் சோக்சி இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக கத்தார் நாட்டு விமானத்தை வாடகைக்கு அமர்த்தி டொமினிக்காவுக்கு அவசர அவசரமாக அனுப்பிய இந்திய அரசின் முயற்சியில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய வெளியுறவுத் துறை சார்பில் அறிவிப்பு ஒன்றினை வெளியுறவுத்துறை பேச்சாளர் அரிந்தாம் பக்ஷி, சோக்ஸியை மீண்டும் இந்தியாவுக்கு இழுத்து வருவதற்கான இந்திய வெளியுறவுத்துறை அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory