» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீனாவின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய இந்திய வம்சாவளி செய்தியாளருக்கு புலிட்சர் பரிசு

ஞாயிறு 13, ஜூன் 2021 10:09:13 AM (IST)

சீனாவின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய இந்திய வம்சாவளி செய்தியாளர் மேகா ராஜகோபாலனுக்கு புலிட்சர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பத்திரிகையாளர் ஜோசப் புலிட்சர் நினைவாக பத்திரிகை, நாடகம், இசை உள்ளிட்டதுறையில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் கொலம்பியா பல்கலைக்கழகத்தால் புலிட்சர் பரிசு வழங்கப்படுகிறது. இந்தஆண்டுக்கான புலிட்சர் பரிசு பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் பொது சேவை பிரிவில் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் புலிட்சர் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது.

சர்வதேச செய்தி சேகரிப்புபிரிவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேகா ராஜகோபாலனுக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட் டுள்ளது. அமெரிக்காவின் ஆன்லைன் செய்தி ஊடகமான BuzzFeed சார்பில் சீனாவில் சுமார் 6 ஆண்டுகளுக்கும் மேலாக மேகா ராஜகோபாலன் பணியாற்றினார். சீன அரசுக்கு எதிராக செய்திகளை வெளியிட்டதாக கடந்த 2018 ஆகஸ்டில் சீனாவில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.

எனினும் சீனாவில் அவர் வசித்தபோது ஜின்ஜியாங் பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் உய்குர் முஸ்லிம்களை அந்த நாட்டுஅரசு தடுப்பு முகாம்களில் அடைத்துசித்ரவதை செய்வது குறித்த முக்கிய ஆதாரங்களை திரட்டினார். இதுதொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பரில் விரிவான ஆதாரங்களுடன் மேகா ராஜகோபாலன் செய்தி வெளியிட்டார். இந்த செய்திக்காக அவருக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது மேகா ராஜகோபாலன் லண்டனில் பணியாற்றி வருகிறார்.அவர் கூறும்போது, "எனது பெற்றோர் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். நான் அமெரிக்காவின் மேரிலேண்டில் பிறந்து வளர்ந்தேன். எனது குடும்பத்தைச் சேர்ந்த யாரும் ஊடகத் துறையில் இல்லை. எனது தனிப்பட்ட விருப்பத்தால் செய்தியாளராகப் பணியாற்றி வருகிறேன். புலிட்சர் விருதுகிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார். உள்ளூர் செய்தி சேகரிப்பு பிரிவில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க செய்தியாளர் நீல் பேடிக்கும் புலிட்சர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory