» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இஸ்ரேலின் புதிய பிரதமராக நஃப்தாலி பென்னெட் பொறுப்பேற்பு: பிடேன், மோடி வாழ்த்து
திங்கள் 14, ஜூன் 2021 5:14:11 PM (IST)

இஸ்ரேலின் புதிய பிரதமரான பென்னெட்டுக்கு அமெரிக்க அதிபர் பிடேன் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இஸ்ரேலில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிக்குட் கட்சி தலைமையிலான கூட்டணி 54 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க 61 இடங்கள் தேவை என்கிற நிலையில் புதிய அரசு அமைப்பதற்கு பெஞ்சமின் நேத்தன்யாகுவுக்கு 28 நாள் அவகாசம் தந்தார் இஸ்ரேல் ஜனாதிபதி. ஆனால் அந்த அவகாசத்தில் நெதன்யாகுவால் பெரும்பான்மையை திரட்ட முடியவில்லை. எதிர்கட்சியை அழைத்து ஆட்சி அமைக்க முயற்சி செய்யும்படி இஸ்ரேல் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.
அதனடிப்படையில் எதிர்பாராத திடீர் திருப்பமாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்தன. எதிர்க்கட்சிகள் கூட்டணி அரசை உருவாக்கின. கடந்த தேர்தலில் 2-வது இடத்தை பிடித்த யேஷ் அதித் கட்சியின் தலைவர் யெய்ர் லாப்பிட் தலைமையில் இந்த எதிர்க்கட்சி கூட்டணி உருவாகியுள்ளது. இந்த கூட்டணியில் முக்கிய கட்சியாக தீவிர வலதுசாரி கட்சியான யாமினா கட்சி இடம்பெற்றுள்ளது. அந்த கட்சியின் தலைவராக இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை முன்னாள் மந்திரியான நஃப்தாலி பென்னெட் பிரதமர் என முடிவு செய்யப்பட்டது
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க இஸ்ரேல் ஜனாதிபதி கூறினார். அதற்கு நாடாளுமன்றம் ஞாயிற்றுக்கிழமை கூட்டப்பட்டது. பெரும்பான்மையை நிரூபிக்க இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் யெய்ர் லாப்பிட் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி 60 வாக்குகள் பெற்று பெரும்பான்மையை நிரூபித்தது. நேத்தன்யாகு அணி 59 வாக்குகள் பெற்றது. இதன் மூலம் 12 ஆண்டுகள் இஸ்ரேலின் பிரதமராக செயல்பட்டு நேத்தன்யாகுவின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
நேத்தன்யாகுக்கு புது நாற்காலி வரவழைக்கப்பட்டது. புதிய நாற்காலியில் நேத்தன்யாகு அமர்ந்தார். பழைய பிரதமர் அமர்ந்திருந்த நாற்காலியில் பென்னெட் அமர்ந்து பதவிப்பிரமாணம் எடுத்துக கொண்டார். அமைச்சரவை உறுப்பினர்களும் பதவி ஏற்றனர். பென்னெட் துவக்க உரை ஆற்றினர். அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் நேத்தன்யாகு பேசினார். விரைவில் கூட்டணி அரசைக் கவிழ்ப்பேன் என்று அவர் உறுதியாகக் கூறினார். புதிய பிரதமர் இஸ்ரேலிய அதிபருடன் மரபுப்படி புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தப் புகைப்படம் மூலம் ஆட்சி மாற்றத்தை இஸ்ரேல் ஜனாதிபதி உறுதி செய்ததாகக் கருதப்படுகிறது.
பிடேன், மோடி வாழ்த்து
இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள நஃப்தாலி பென்னெட்டிற்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் பென்னெட்டை தொலைபேசியில் தொடர்புகொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்தார்.இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள நஃப்தாலி பென்னெட் 2 ஆண்டுகள் பதவி வகிப்பார். அதன் பின்னர் ஆட்சியின் மீதமுள்ள அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு யேஷ் அதித் கட்சியின் தலைவரான யெய்ர் லாப்பிட் இஸ்ரேலின் பிரதமராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜிமெயில் முகவரியை மாற்றிக் கொள்ளும் வசதி அறிமுகம்: கூகுள் நிறுவனம் அறிவிப்பு
புதன் 31, டிசம்பர் 2025 3:29:53 PM (IST)

வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்
செவ்வாய் 30, டிசம்பர் 2025 10:51:19 AM (IST)

உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: டிரம்ப்
திங்கள் 29, டிசம்பர் 2025 5:39:55 PM (IST)

தாய்லாந்து - கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்: கூட்டு அறிக்கை வெளியீடு!
சனி 27, டிசம்பர் 2025 4:02:41 PM (IST)

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு: விமானங்கள் ரத்து - பயணிகள் அவதி!!
சனி 27, டிசம்பர் 2025 12:31:05 PM (IST)

புதின் அழிய வேண்டும் என்பதுதான் உக்ரைன் மக்களின் வேண்டுதல்: அதிபர் ஸெலென்ஸ்கி!
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:50:00 PM (IST)


