» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சீனாவின் விண்வெளி நிலையத்திற்கு முதல் முறையாக 3 விண்வெளி வீரர்கள் பயணம்!!
வியாழன் 17, ஜூன் 2021 12:28:11 PM (IST)
விண்வெளியில் சீனா உருவாக்கி உள்ள தியாங்காங் விண்வெளி நிலையத்தின் கட்டுமான பணிகளை மேற்கொள்ள 3 விண்வெளி வீரர்கள் புறப்பட்டு சென்றனர்.

சூரிய மண்டலத்தில் பூமிக்கு அருகிலுள்ள கிரகங்கள் மற்றும் அவற்றின் நிலவுகள் தொடர்பான ஆய்வுகள் மற்றும் அங்குள்ள மனித வாழ்க்கைக்கு ஏதுவான சூழல் தொடர்பான ஆய்வுகள் அங்கு நடந்து வருகிறது. அமெரிக்காவின் நாசா மட்டுமல்லாமல் உலகின் பல தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்களும் இதற்கான ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சீன விண்வெளி வீரர்கள் செல்ல அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதனை அடுத்து சீனா தற்போது தனியாக தியாங்காங் என்று விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது. இந்த விண்வெளி நிலையம் பூமியில் இருந்து 340 முதல் 450 கிலோ மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. சீனா முன்னர் விண்வெளி நிலையத்தின் தியான்ஹே கோர் கேபின் தொகுதியை ஏப்ரல் 29 அன்று லாங் மார்ச் -5 பி கேரியர் ராக்கெட் வழியாகவும், தியான்ஜோ -2 சரக்கு விண்கலத்தை லாங் மார்ச் -7 வழியாக மே 29 அன்று அனுப்பியது.
இதன் தொடர்ச்சியாக ஒரு மாதம் கழித்து அதாவது மே 29ம் தேதியன்று விண்வெளி நிலையத்திற்கான எரிபொருள், விண்வெளி உடைகள், உணவு பொருட்களுடன் தியான்ஜோ -2 என்ற சரக்கு விண்கலத்தை சீனா விண்ணுக்கு அனுப்பியது. இந்த நிலையில், விண்வெளி நிலையத்தில் பணியாற்றுவதற்காக 3 விண்வெளி வீரர்களை அனுப்பி வைக்க போவதாக சீனா அறிவித்திருந்தது.
இதற்காக கடந்த சில மாதங்களாகவே விண்வெளி வீரர்களுக்கு என தனியாக பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சிகள் நிறைவடைந்த நிலையில் அவர்கள் மூவரும் ஷென்ஜோ -12 என்ற விண்கலம் மூலம் விண்வெளிக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி விழாவாக இன்று நடைபெற்றது. நீ ஹைஷெங், லியு போமிங் ,மற்றும் டாங் ஹோங்போ என விண்வெளி வீரர்கள் அனைவரும் பொதுமக்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டனர். கூடி இருந்த பொதுமக்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அங்கு குழுமியிருந்த சிறுவர்கள் விண்வெளி வீரர்களிடம் கற்றுக்கொள்கிறோம் என சீன மொழியில் முழங்கினர். இதன் தொடர்ச்சியாக விண்வெளி வீரர்கள் அனைவரும் பாதுகாப்புடன் ஷென்ஜோ -12 விண்கலம் செலுத்தப்பட இருந்த ஜுகுவான் ஏவுதளத்திற்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு மரியாதை செலுத்தியதை அடுத்து அவர்கள் விண்கலத்திற்குள் அழைத்து செல்லப்பட்டனர்.
இதனையடுத்து ஷென்ஜோ -12 விண்கலம் 3 விண்வெளி வீரர்களையும் தாங்கி விண்ணிற்கு செலுத்தப்பட்டது. விண்வெளி மையத்திற்கு செல்லும் மூவரும் சுமார் 3 மாதங்கள் சீன விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்து ஆய்வு நடத்துவர். ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளில் சீனா விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது இதுவே முதல்முறையாகும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் குடியேற்றத்துக்கு எதிராக பொதுமக்கள் மாபெரும் போராட்டம்!!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:33:58 AM (IST)

பின்லேடன் உங்கள் நாட்டில்தான் கொல்லப்பட்டார் : ஐ.நா. சபையில் பாக். மீது இஸ்ரேல் தாக்கு!
சனி 13, செப்டம்பர் 2025 5:04:44 PM (IST)

ரஷியாவில் ரிக்டர் 7.4 அளவில் பயங்கர நிலநடுக்கம்
சனி 13, செப்டம்பர் 2025 12:34:05 PM (IST)

நேபாள இடைக்கால பிரதமராக சுசிலா கார்க்கி பதவி ஏற்பு: 6 மாதத்தில் தேர்தல் நடத்த முடிவு
சனி 13, செப்டம்பர் 2025 10:39:31 AM (IST)

உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை நிறுத்தம்: ரஷ்யா அறிவிப்பு
சனி 13, செப்டம்பர் 2025 10:34:56 AM (IST)

சார்லி கிர்க் கொலை: குற்றவாளி குறித்த தகவல் அளித்தால் ஒரு லட்சம் டாலர் சன்மானம்!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 12:37:14 PM (IST)
