» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ரஷிய அதிபர் புதினுக்கு சிறப்பு பரிசு வழங்கிய அமெரிக்க அதிபர் பைடன்!
வெள்ளி 18, ஜூன் 2021 4:38:52 PM (IST)

ஜெனீவாவில் நடைபெற்ற சந்திப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு வழங்கிய சிறப்பு பரிசு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
உலகின் முன்னணி வல்லரசு நாடுகளான அமெரிக்காவும், ரஷியாவும் பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளில் எதிரெதிர் பார்வை கொண்டவை. ஒன்றுக்கொன்று போட்டியாக உள்ள இரு நாடுகளின் தலைவர்களும் சந்தித்து பேசிக் கொள்வது உலக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஸ்சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் சந்தித்துக் கொண்டனர்.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு ரஷிய அதிபருடன் நடைபெறும் முதல் நேரடி சந்திப்பு என்பதால் உலகின் கவனம் இந்த சந்திப்பின் பக்கம் திரும்பியது. இந்த சந்திப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு 23 காரட் தங்கக் காப்பால் செய்யப்பட்ட கண்கண்ணாடியை பரிசளித்துள்ளார். அமெரிக்க அதிபர் பைடன் விரும்பி அணியும் இந்த கண் கண்ணாடி போர் விமானிகளுக்காக மாசூசெட்ஸில் தயாரிக்கப்படும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
பல்வேறு முக்கியத் தலைவர்களுடனான சந்திப்பில் அமெரிக்க அதிபர் பைடன் இத்தகைய கண்ணாடியை அணிவது வழக்கம். மேலும் புதினுக்கு நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்ட கண்ணாடி சிற்ப தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட காட்டெருமை வடிவிலான படிக சிற்பமும் நினைவு பரிசாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்திய அரசு முயற்சி: கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஒத்திவைத்தது ஏமன்!
செவ்வாய் 15, ஜூலை 2025 5:04:27 PM (IST)

சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சந்திப்பு
செவ்வாய் 15, ஜூலை 2025 4:08:45 PM (IST)

பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்தின் நோக்கம் அமைதியை நோக்கியது : ஷெபாஸ் ஷெரீப்
ஞாயிறு 13, ஜூலை 2025 6:51:16 PM (IST)

நெட்பிளிக்ஸ் மொத்த படமும் நொடியில் டவுன்லோடு : இணைய வேகத்தில் ஜப்பான் உலக சாதனை!!
சனி 12, ஜூலை 2025 5:32:49 PM (IST)

நாசாவில் செலவினங்களை குறைக்க 2ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்? டிரம்ப் அதிரடி முடிவு!
வெள்ளி 11, ஜூலை 2025 10:30:06 AM (IST)

நிதி நிறுவனத்தின் ஆலோசகராக மீண்டும் பணிக்கு திரும்பினார் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்!
புதன் 9, ஜூலை 2025 4:33:30 PM (IST)
