» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தடுப்பூசி போடாவிட்டால் கைது நடவடிக்கை : பிலிப்பின்ஸ் மக்களுக்கு அதிபர் எச்சரிக்கை

செவ்வாய் 22, ஜூன் 2021 4:16:38 PM (IST)



கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிலிப்பின்ஸ் மக்களுக்கு அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன. இந்நிலையில் பிலிப்பின்ஸில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தயாராக இல்லாத பொதுமக்கள் கைது செய்யப்படுவர் என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டே,"நாட்டில் ஒரு நெருக்கடி நிலை நிலவுகிறது. தேசிய அவசரநிலை உள்ள நிலையில் நீங்கள் தடுப்பூசி போட விரும்பவில்லை என்றால், நான் உங்களை கைது செய்து தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார். மேலும், "தடுப்பூசி போட நீங்கள் ஒப்புக் கொள்ளாவிட்டால், பிலிப்பின்ஸை விட்டு வெளியேறுங்கள்” என்று அவர் கூறினார். பிலிப்பின்ஸில் கரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும்பணி கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory