» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மல்லையா, மெகுல் சோக்சி, நிரவ் மோடி சொத்துக்கள் பொதுத் துறை வங்கிகளுக்கு மாற்றம்

புதன் 23, ஜூன் 2021 5:52:28 PM (IST)

விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரின் ரூ.8,441.50 கோடிக்கான சொத்துக்களை பொதுத் துறை வங்கிகளுக்கு அமல் பிரிவு இயக்குனரகம் மாற்றியுள்ளது.

இந்திய ஸ்டேட் வங்கியின் கிளைகளில் ஒட்டுமொத்தமாக ரூபாய் 9,900 கோடி மதிப்புள்ள கடன்களை வாங்கிக்கொண்டு கடனை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றியதாக மதுபான உற்பத்தி நிறுவனமான யுனைடெட் புரிவது நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் மல்லையா மீது ஸ்டேட் வங்கி வழக்கு தொடர்ந்தது. அதன்பேரில் அமல் பிரிவு இயக்குனரகம் நடவடிக்கை மேற்கொண்டு விஜய் மல்லையா பெயரில் இருந்த யூபி நிறுவன பங்குகள் எல்லாவற்றையும்  பற்றியது.

அமுல் பிரிவு இயக்குனராக விஜய் மல்லையாவின் பினாமிகள் என்று பலரிடம் மிகுந்த பங்குகளையும் கைப்பற்றியது இந்த பங்குகள் எல்லாவற்றையும் இந்திய ஸ்டேட் வங்கி குழுமத்திடம் ஒப்படைத்ததுஇந்த பங்குகளில் ஒரு பகுதியை ஸ்டேட் வங்கி ரூ.1357 கோடிக்கு விற்றது. இன்று பங்கு வர்த்தகம் துவங்குவதற்கு முன்பு ஹெய்னேகன் என்ற  நிறுவனத்துக்கு ரூபாய் 5,825 கோடிக்கு ஸ்டேட் வங்கி விற்பனை செய்தது.

இதுவரை நிறுவன பங்குகளை விற்பதன் மூலம் விஜய் மல்லையாவுக்கு தந்த கடனில் 70 சதவீதத்தை ஸ்டேட் வங்கி வசூல் செய்துள்ளது.ஜூன் மாதம் 25ஆம் தேதி இந்நிறுவனத்தின் பங்குகளை ரூ.800 கோடிக்கு விற்க உள்ளது. இந்தப் பங்குகள் எல்லாம் விஜய் மல்லையாவின் பினாமி பங்குகள் என்று அமல் பிரிவு இயக்குனரகம் அறிவித்துள்ளது.

விஜய் மல்லையா. நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரின் ரூ. 8,441.50 கோடிக்கான சொத்துக்களை பொதுத் துறை வங்கிகளுக்கு அமல் பிரிவு இயக்குனரகம் மாற்றிக் தந்துள்ளது.மேலே குறிப்பிட்ட 3 பேரும் இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளை ரூ. 22,585.83 கோடி அளவுக்கு ஏமாற்றி இருப்பதாக தகவல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 8,441.50 கோடி மதிப்புள்ள 3 பேருக்கும் சொந்தமான சொத்துக்களை பொதுத்துறை வங்கிகளிடம் அமல் பிரிவு இயக்குனரகம் ஒப்படைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory