» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அனைத்து வகை கரோனா வைரஸ்களையும் எதிர்க்கும் சூப்பர் வேக்சின்: அமெரிக்கா கண்டுபிடிப்பு

வியாழன் 24, ஜூன் 2021 5:41:43 PM (IST)

அனைத்து வகையான கரோனா வைரஸ்களையும் எதிர்க்கும் சூப்பர் வேக்சினை அமெரிக்க ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

கரோனா வைரஸ் டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் என உருமாறி அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், விஞ்ஞானிகள் எல்லா வகை கரோனா வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கும் புதிய சூப்பர் வேக்சின் ஒன்றை கண்டறிந்து உள்ளனர். அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், சூப்பர் வேக்சின் என்று குறிப்பிடப்படும் ஹைபிரிட் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளனர்.

கரோனா வைரசின்  ஆபத்தான அமைப்பான ஸ்பைக் புரதத்தின் பல்வேறு வகைகளுக்கு எதிராக, ஆன்ட்டிபாடிகளை இந்த தடுப்பு மருந்து உருவாக்குவது, எலிகள் மீதான பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பதோடு, நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதையும் தடுப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்றை உருவாக்கும் கரோனா வைரஸ்கள் மட்டுமின்றி, விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய வாய்ப்பு உள்ள பிற கரோனா வைரஸ்களுக்கு எதிராகவும் தடுப்பாற்றலை ஏற்படுத்தும் வகையில், தடுப்பு மருந்து வடிவமைக்கப்பட்டுள்ளதாக  ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தடுப்பு மருந்து அடுத்த ஆண்டில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட உள்ளது.


மக்கள் கருத்து

இந்தியன்Jun 25, 2021 - 03:20:57 PM | Posted IP 173.2*****

இந்த நியூஸ் சேனல் நல்ல கதை விடுது. நமது நாட்டில் உள்ள நல்ல கண்டுபிடிப்புகளை போடமாட்டான். அமெரிக்கா என்றவுடன் கதை விட்டாலும் செய்தி போடுவார்கள். .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory