» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசியை இறக்குமதி செய்ய பிரேசில் அனுமதி

வெள்ளி 25, ஜூன் 2021 5:42:29 PM (IST)

இந்தியாவின் பாரத் பயோடெக் தயாரித்துள்ள 40 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய பிரேசில் அரசு இன்று அனுமதி வழங்கியுள்ளது.

உலக சுகாதாரத்துறையின் ஒப்புதல் பெறப்படாத இந்நிலையில் பிரேசில் அரசு 40 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஆணை வழங்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. முதலில் வாங்கப்படும் 40 லட்சம் தடுப்பூசிகளை பிரேசில் மக்களுக்கு வழங்குவோம். இந்தியப் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பிரேசில் நாட்டு மக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள் இந்த விவரங்கள் பதிவு செய்யப்படும்.  40 லட்சம் தடுப்பூசி மருந்துகளைப் பயன்படுத்திய பிறகு புள்ளி விவரங்களை நாங்கள் ஆய்வு செய்வோம் அதனடிப்படையில் அடுத்து எவ்வளவு தடுப்பூசிகளை வாங்குவது என்று முடிவு செய்வோம் என பிரேசில் சுகாதார ஒழுங்குமுறை முகமை அறிவித்துள்ளது.

முதலில் இந்தியா தயாரித்துள்ள தடுப்பூசி மருந்தாகிய கோவாக்சினை இறக்குமதி செய்ய பிரேசில் அரசு மறுத்துவிட்டது .பிரேசில் அரசுக்கு பாரத் பயோடெக் நிறுவனம் விரிவான விளக்கங்களை வழங்கியுள்ளது. இப்பொழுது 3வது கட்ட சோதனை முடிவுகள் வெளியாகி இருப்பதால் இந்திய தடுப்பூசி மருந்து இறக்குமதி செய்ய பிரேசில் அரசு முன்வந்துள்ளது. ரஷியா தயாரித்துள்ள தடுப்பூசி மருந்தாகிய ஸ்புட்னிக்கை இறக்குமதி செய்யவும் பிரேசில் அரசு முடிவு செய்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory