» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆப்கானில் அமெரிக்க ராணுவ நடவடிக்கை ஆகஸ்ட் 31ம் தேதியுடன் முடிவுக்கு வரும் : ஜோ பைடன் அறிவிப்பு

வெள்ளி 9, ஜூலை 2021 3:59:36 PM (IST)

ஆப்கானில் அமெரிக்க ராணுவ நடவடிக்கை வரும் ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முழுமையாக முடிவுக்கு வந்துவிடும் என அதிபா் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

தோஹாவில் சமீபத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தலிபான்களுக்கும், அமெரிக்காவுக்கும் உடன்பாடு ஏற்பட்டது. ஆப்கன் அரசுடன் தலிபான்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும், ஆப்கனிலிருந்து வெளியேறும் அமெரிக்கப் படை மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்பன உள்ளிட்ட முடிவுகள் எட்டப்பட்டன.

இந்நிலையில், அமெரிக்கப் படை திரும்பப் பெறப்படும் என அதிபா் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் ஜோ பைடன் கூறியதாவது: ஆப்கனில் தேசத்தைக் கட்டமைக்கும் பணிக்காக அமெரிக்க ராணுவம் அங்கு செல்லவில்லை. அந்த நாட்டின் எதிர்காலத்தை மேம்படுத்த ஆப்கன் தலைவா்கள் ஒன்றிணைந்து முயற்சிகளை எடுக்கவேண்டும். மேலும், ஆயிரக்கணக்கான அமெரிக்கா்களை ஆபத்தில் சிக்கவைக்க அமெரிக்கா விரும்பவில்லை. 

தலிபான்களை நம்பவில்லை என்றபோதும், ஆப்கன் அரசை காக்கும் திறன் அந்நாட்டு ராணுவத்துக்கு உள்ளது என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, ஆப்கானில் அமெரிக்க ராணுவ நடவடிக்கை வரும் ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முழுமையாக முடிவுக்கு வந்துவிடும் என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory