» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் 12 மாடி கட்டிடம் இடிந்து விபத்து : உயிரிழப்பு 90 ஆக அதிகரிப்பு

திங்கள் 12, ஜூலை 2021 12:44:09 PM (IST)



அமெரிக்காவில் 12 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 90 ஆக உயர்ந்து உள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடிகளை கொண்ட குடியிருப்பு வளாகம் ஒன்று கடந்த ஜூன் 24ந்தேதி திடீரென இடிந்து விழுந்தது.  இதனால் அப்பகுதியில் பல்வேறு குடியிருப்புகளில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேறினர்.  இந்த சம்பவத்தில் தொடர்ந்து பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், மாயமானவா்களின் குடும்பத்தினரிடம் மியாமி-டேட் நகர மேயா் டேனியலா லெவைன் காவா கூறும்போது, அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த பகுதியிலிருந்து மேலும் சில உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது.  இதனை தொடா்ந்து, விபத்தில் 79 பேர் உயிரிழந்தது அதிகாரபூா்வமாக உறுதியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை மிகவும் வேதனை அளிக்க கூடியது. இடிபாடுகளில் சிக்கியுள்ள உடல்களை மீட்பதற்கான பணிகளை அவசரமாக மேற்கொள்ள மீட்பு குழுவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். 

கட்டிடம் இடிந்து விழுந்து 18 நாட்கள் கடந்த நிலையில், விபத்தில் பலி எண்ணிக்கை 90 ஆக உயர்ந்து உள்ளது. கட்டிட இடிபாடுகளில் புதையுண்டவர்கள் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் நடந்து 2 வாரங்களுக்கும் கூடுதலான நிலையில், உயிருடன் இருக்க கூடியவர்களை கண்டறிவது என்பது சாத்தியமில்லை என்று மீட்பு குழுவினர் கூறியுள்ளனர்.  விபத்துக்கு பிறகு இன்னும் 31 பேரை காணவில்லை என கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory