» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீன ஆய்வகத்தில் இருந்து கரோனா பரவியதற்கு ஆதாரங்கள் உள்ளது: அமெரிக்கா புகார்

செவ்வாய் 3, ஆகஸ்ட் 2021 12:01:48 PM (IST)

சீன ஆய்வகத்தில் இருந்து தான் கரோனா வைரஸ் பரவியது என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளதாக, அமெரிக்க குடியரசு கட்சி தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19.95 கோடியை தாண்டியுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்க குடியரசு கட்சியின் பார்லி., வெளியுறவு குழு பிரதிநிதி மைக் மெக்கால் கரோனா குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் , கரோனா வைரஸ் சீனாவின் உகான் விலங்குகள் சந்தையில் இருந்து பரவவில்லை அது, உகான் வைரஸ் ஆய்வுக் கூடத்தின் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் கூடத்தில் மனிதரை தாக்கும் வகையில் கரோனா வைரசை உருவாக்கவும், இது பற்றி வேறு யாரும் அறியாதபடி மறைப்பதற்கான பணிகளும் நடந்துள்ளன. இதற்கு நிறைய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 

கரோனா வைரஸ், 2019, செப்டம்பர் 12க்கு முன்பாகவே, உகான் ஆய்வுக் கூடத்தில் இருந்து வெளியே கசிந்துள்ளதை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் உள்ளன. உகான் ஆய்வகத்தில் அபாயகரமான கழிவுகளை பராமரிக்கும் பிரிவை சீரமைக்க நிதி கோரப்பட்டுள்ளது. இதற்காக, 11 கோடி ரூபாய் ஒதுக்கும்படி ஆய்வக நிர்வாகம் சீன அரசிடம் விண்ணப்பித்துள்ளது. ஆய்வகம் செயல்படத் துவங்கி இரு ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் அபாயகரமான கழிவுகளைக் கையாளும் வசதி தேவைப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory