» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மாலியில் பிரான்ஸ் தாக்குதலில் ஐ.எஸ். தலைவர் பலி: இம்மானுவேல் மெக்ரான் தகவல்

வியாழன் 16, செப்டம்பர் 2021 10:40:36 AM (IST)

ஆப்பிரிக்காவில் பிரான்ஸ் படையினர் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் உயிரிழந்துவிட்டதாக அதிபர் இம்மானுவேல் மெக்ரான் தெரிவித்துள்ளார்.

மாலி, பர்கினோ பாசோ, நைஜர் ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இஸ்லாமிக் ஸ்டேட் இன் கிரேட்டர் சஹாரா (ஐ.எஸ்.ஜி.எஸ்.) என்று பெயர் கொண்ட இந்த பயங்கரவாத அமைப்பு ஆப்பிரிக்க நாடுகளில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பின் தலைவனாக அதான் அபு வாலிட் அல் ஷராவி என்பவர் செயல்பட்டு வந்தார்.

இதற்கிடையில், இந்த பயங்கரவாத அமைப்பை ஒடுக்கும் நடவடிக்கையில் மாலி, பர்கினோ பாசோ, நைஜர் ஆகிய நாடுகளுக்கு பிரான்ஸ் உதவி வருகிறது. இதற்காக பிரெஞ்சு படைகள் மாலியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் பாதுகாப்பு படையினர் மாலியில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் மீது அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில், பிரெஞ்சு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் ஆப்பிரிக்க ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் அதான் அபு வாலிட் அல் ஷராவி கொல்லப்பட்டுள்ளார்.  இந்த தகவலை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஐ.எஸ்.ஜி.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவன் அல் ஷராவி கொல்லப்பட்டுள்ளபோதும் மாலியில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் பிரான்ஸ் தொடர்ந்து ஈடுபடும் என மெக்ரான் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory