» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்களை வாங்க எதிர்ப்பு : ஆஸ்திரேலியாவுக்கு சீனா பகிரங்க மிரட்டல்!

வெள்ளி 17, செப்டம்பர் 2021 4:16:24 PM (IST)



அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா கூட்டமைப்பிற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்து. மேலும் ஆஸ்திரேலியா அணு ஆயுத தாக்குதலுக்கு இலக்காகலாம் என்று பகீரங்க மிரட்டல் விடுத்துள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இணைந்து இந்தோ-பசிபிக் பகுதிக்கு புதிய மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு கூட்டமைப்பை (AUKUS) அறிவித்துள்ளது.  இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டவே இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக மூன்று நாடுகளும் கூட்டாக அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த கூட்டணியில் ஆஸ்திரேலியாவுக்கு அணு ஆயுத்தை ஏவும் திறன் கொண்ட 8 நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க தேவையான தொழில்நுட்பத்தை வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால், நீர்கப்பல்களை தயாரிக்க பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திடன் ஆஸ்திரேலிய அரசு செய்துகொண்ட ஒப்பந்தம் முறிவடைந்துள்ளது.  

இந்நிலையில், அணு ஆயுதங்களை ஏவக்கூடிய திறன்கொண்ட நீர்மூழ்கி கப்பல்களை ஆஸ்திரேலியா வாங்குவதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா (AUSUK) கூட்டணி பிராந்திய அமைதி, நிலைத்தன்மைக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளார். மேலும், அணு ஆயுத வல்லமை கொண்ட நீர்மூழ்கி கப்பல்களை வாங்கும் பட்சத்தில் ஆஸ்திரேலியா அணு ஆயுத தாக்குதலுக்கு இலக்காகலாம் என்று சீன அரசு ஊடகமான தி குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory